முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் எம்.பி. மனைவி மரணம்:ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இரங்கல்

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,நெல்லை முன்னாள் எம்.பி. சவுந்திரராஜனின் மனைவி இந்துமதி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்த இரங்கல் செய்தி வருமாறு:-  திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத்தலைவரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான செளந்திரராஜனின் மனைவி இந்துமதி உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். மனைவியை இழந்து வாடும் அன்புச்சகோதரர் செளந்திரராஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து