முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகப்போட்டி: டோனி செய்த சாதனை

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றுப் போட்டியில், பாகிஸ்தானை இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்தது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் டோனி புது சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடியதில் ராகுல் டிராவிட் சாதனையை தற்போது டோனி முறியடித்துள்ளார்.

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக 504 போட்டிகளில் விளையாடி இரண்டாவது இடத்தில் டிராவிட் இருந்த நிலையில் டோனி அதனை முறியடித்து (505 போட்டிகள்) தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தியாவிற்காக 664 போட்டிகளில் விளையாடி சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய அணிக்காக சர்வதேச அளவில் டோனி இதுவரை 90 டெஸ்ட், 322 ஒருநாள் போட்டிகள் மற்றும் 93 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் டோனி அடித்த மொத்த ரன்கள் 16,268 ரன்கள் ஆகும். இதில் 15 சதம், 102 அரை சதம் அடங்கும்.
ம்மையாரது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து