முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு:குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை கோபி நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

கோபி,கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து கோபி செட்டிபாளையம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2000 ஆவது ஆண்டு, ஜூலை 30ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தொட்டகஜனூரில் தனது பண்ணை வீட்டில் இருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றான். இது தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் 108 நாட்கள் கழித்து,நடிகர்  ராஜ்குமார் வீரப்பனால் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா ஆகியோர் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். மல்லு என்பவர் இறந்து விட்டார். ரமேஷ் என்பவர்  தலைமறைவாகியுள்ளார்.

இதுதொடர்பான வழக்கு ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 18 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வழக்கில் தொடர்புடையவர்களில் எஞ்சிய 9 பேரை ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து கோபிசெட்டிபாளையம் 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து