முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய அரசியலில் கால் பதிக்கிறேன்: டி.ராஜேந்தர் சொல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தேசிய அரசியலில் கால்பதிக்க உள்ளதாக, லட்சிய திமுகவின் தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.சென்னை தியாகராயநகரில் நேற்று டி.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சினிமாவில் நான் புறக்கணிக்கப்பட்டவன். பட விழாவொன்றில் பேசிய, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நான் அவருடைய பாதி எனக் கூறினார். எனக்கு அரசியலில் பிள்ளையார் சுழி போட்டவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து வைகோ பிரிந்தவுடன் கருணாநிதி என்னை தி.மு.க.வில் இணைய அழைத்தார். கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்தார்.

தி.மு.க.வில் இருந்து விலகிய பிறகு, அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தேன். 2005-ல் காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்ததற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனக்கு நன்றி தெரிவித்தார்.எனது கட்சியான லட்சிய தி.மு.க. சின்னம் கூட இல்லாத சிறிய கட்சியாக இருந்தாலும், வரும் அக்டோபர் 3 ஆம் தேதி எனது பிறந்தநாளன்று பொதுக்குழுவை கூட்டி புதிய பரிணாமத்தை அறிவிக்க உள்ளேன். மேலும், மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி எனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். இரண்டு திரைப்படங்கள் எடுக்கிறேன்.

தமிழகத்திலேயே இருந்தால் சரிவராது, அதனால் தேசிய அரசியலில் கால்பதிக்க உள்ளேன். அதற்காக இந்தியில் 2 திரைப்படங்கள் எடுக்க உள்ளேன். அதுகுறித்தும் எனது பிறந்த நாளன்று அறிவிப்பேன்.
சிலர் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என பில்டப் கொடுக்கின்றனர். என் மகனின் எஸ்.டி.ஆர். மன்றம் புனரமைப்பு செய்யப்படும்” என டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து