முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் வக்கீல்களாக பணியாற்றலாம்:சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,எம்.பி.க்கள் வழக்கறிஞர்களாக பணியாற்றத் தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் டெல்லியைச் சேர்ந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகியும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய என்பவர் பொதுநல மனு தொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர், "எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் (சட்டமேலவை உறுப்பினர்கள்) ஆகியோர் தங்களது பணிக் காலத்தில், நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடை விதிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது அஸ்வினி உபாத்யாய சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர் நாபாதே, "மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசு கஜானாவில் இருந்து சம்பளம் அளிக்கப்படுகிறது; இவ்வாறு பிற தொழில் மூலம் ஊதியம் பெறுவோர், நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு பார் கவுன்சில் தடை விதித்துள்ளது. இருப்பினும், ஏராளமான மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்களாக பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14ஆவது விதிக்கு எதிரானது' என்று வாதிட்டார்.அப்போது மத்திய அரசு தரப்பில், எம்.பிக்களும், எம்.எல்.ஏ.க்களும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆவர். அரசு ஊழியர் கிடையாது. ஆதலால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதை சுப்ரீம் கோர்ட் பதிவு செய்து கொண்டது.

இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட் ஆகியோரை கொண்ட அமர்வில் கடந்த ஜூலை மாதம் 9ஆம் தேதி கடைசியாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.இந்நிலையில் எம்.பி.க்கள் வழக்கறிஞர்களாக பணியாற்றத் தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு நேற்று தீர்ப்பளித்துள்ளது. அதாவது எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் வக்கீல்களாக பணியாற்றலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து