முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்ரம்ப் உத்தரவை புறக்கணித்த சவுதி கச்சா எண்ணெய் விலை 4 ஆண்டுகளில் இல்லாத உச்சம்

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சவுதி அரேபியா மற்றும் ரஷ்ய நாடுகள் புறக்கணித்துள்ளன. இதனால் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை நேற்று பேரல் 81.48 டாலர்களாக உயர்ந்தது.

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி வகித்தபோது, 2015-ம் ஆண்டில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரான் மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

மேலும், ஈரானை தனிமைப்படுத்தும் முயற்சியாக, அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்து வருகிறது. இதனால் ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வர முடியாத சூழலில் அந்த இழப்பை ஈடுகட்ட, சவுதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கூடுதலாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்தார்.

குறிப்பாக தனது மிகநெருங்கிய நட்பு நாடான சவுதி அரேபியா உடனடியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகமாக்க வேண்டும் என அமெரிக்கா சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த வேண்டுகோளை சவுதி அரேபிய ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பை அமெரிக்கா உறுதி செய்வதால் தங்கள் கோரிக்கையை ஏற்று கச்சா எண்ணெய் விலையை குறைக்க உற்பத்தி நாடுகள் முன் வர வேண்டும் என ட்ரம்ப் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோக நாடுகளின் கூட்டமைப்பின் முடிவை இது பாதிக்கும் என்பதால் உற்பத்தியை அதிகரிக்க முடியாது என சவுதி அரேபியா மறுத்து விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து