முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக்கண்காட்சியினை தமிழக துணை முதலமைச்சர்.ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்து பார்வையிட்டார்.

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018      தேனி
Image Unavailable

தேனி,-தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுருளியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்  .ஓ.பன்னீர்செல்வம்  ,   வனத்துறை அமைச்சர்       திண்டுக்கல் சி.சீனிவாசன் ,   சுற்றுலாத்துறை அமைச்சர் . வெல்லமண்டி என்.நடராஜன் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்,   முன்னிலையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்த சிறப்பு புகைப்படக்கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.
தமிழக அரசின் உத்தரவின்படி, தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுருளியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்த சிறப்பு புகைப்படக்கண்காட்சி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வண்ணம் நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில்; சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் தமிழக அரசால் தமிழக மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள் குறித்தும் மேலும் வளர்ச்சித்திட்டப்பணிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாவட்டத்தில் நடைபெற்ற அரசின் முக்கிய நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களை ஒருங்கிணைத்து பொதுமக்கள் அறிந்து தெரிந்து கொள்வதற்காக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது.
இக்கண்காட்சியினை ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு கண்டுகளித்தனர். பொதுமக்கள்; தெரிவிக்கையில், இக்கண்காட்சி செய்தி மக்கள் தொடர்புத்துறையின்  சார்பில், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை எளிதான முறையில் அறிந்து தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது எனத்தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வின்போது, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், மாவட்ட வன அலுவலர் எஸ்.கௌதம், இ.வ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) சி.தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) ஆர்.சித்ராதேவி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் ர.ராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில் அண்ணா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ஏ.கே.நாகராஜபூபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) திரு.அ.இளையேந்திரன், சுற்றுலாப் பயணிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து