முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டன் அரண்மனையில் ருசிகரம்: மனைவிக்கு பயந்து சமோசாவை மறைத்து எடுத்து சென்ற ஹாரி - வீடியோ வைரலால் வரவேற்பு

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன் : இளவரசிக்கு தெரியாமல் சமோசாவை ஒரு தட்டில் வைத்து மறைத்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தவாறே இளவரசர் ஹாரி சென்ற வீடியோ தற்போது வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் மார்கிலின் காதல், மறைந்த இளவரசி டயானாவின் காதலை விட அதிகமாகவே பேசப்பட்டது. திருமணத்திற்கு பிறகும் வாழ்க்கையை இனிமையாக அனுபவித்து வருகிறது இந்த ஜோடி. இந்நிலையில் இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள கென்சிங்டன் அரண்மனையில் அறக்கட்டளை நிறுவனத்திற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இளவரசர் ஹாரி மனைவியை கூட்டிக் கொண்டு சென்றிருக்கிறார். அவர்களுடன் இளவரசியின் தாயாரும் உடன் சென்றுள்ளார். அப்போது விழாவில் உணவு பரிமாறப்பட்டது. அந்த உணவு வகைகளில் படைக்கப்பட்ட சமோசா மீது இளவரசரின் கண் அலைபாய்ந்தது. அதனை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார் ஹாரி. ஆனால் ரொம்ப சாப்பிட்டால் மனைவி திட்டுவார் என்பதால் அதிகம் சாப்பிட முடியாமல் தடுமாறினார். இதனால் இளவரசர் ஹாரி, அப்பறம் சாப்பிடலாம் என்று எண்ணி இளவரசிக்கு தெரியாமல் சமோசாவை ஒரு தட்டில் வைத்து மறைத்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தவாறே சென்றுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தையும் ஒருவர் செல்போனில் படம்பிடித்து, சமூகவலைதளங்களிலும் பதிவிட்டு விட்டார். இவை தற்போது வைரலாகி வருகிறது. இந்த காட்சி அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து