முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஷாரப் நாடு திரும்பினால் உயர் நிலை பாதுகாப்பு - பாக். உச்ச நீதிமன்றம் உறுதி

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : தேசத் துரோக வழக்கை எதிர்கொள்வதற்காக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் நாடு திரும்பினால், அவருக்கு உயர் நிலை பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உறுதியளித்தது.

பாகிஸ்தானில் தனது ஆட்சிக் காலத்தின் போது முஷாரப் நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அவர் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முஷாரபின் உத்தரவால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை தலைமை நீதிபதி சகீப் நிஸார் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அப்போது, இந்த வழக்கு விசாரணைக்காக முஷாரப் ஏன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை? என்று அவரது வழக்குரைஞரிடம் நீதிபதி நிஸார் கேள்வியெழுப்பினார். முதுகு வலிக்காக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி முஷாரப் வெளிநாடு சென்றார். ஆனால், தற்போது அவர் அங்கு ஆரோக்கியமாகவே இருக்கிறார். பிறகு ஏன் அவர் நாடு திரும்பவில்லை? என்றும் வழக்குரைஞரிடம் நீதிபதி கேட்டார்.

அதற்கு, நீதிமன்றத்தை முஷாரப் மிகவும் மதிப்பதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர் நாடு திரும்பவில்லை என்றும் வழக்குரைஞர் பதிலளித்தார். அதையடுத்து, நீதிபதி நிஸார் கூறியதாவது:-

இந்த வழக்கை எதிர்கொள்வதற்காக முஷாரப் பாகிஸ்தான் வந்தால், அவருக்கு உயர் நிலை பாதுகாப்பு அளிக்கப்படும். பாகிஸ்தான் எல்லைப் படையின் தலைமையும், அவர் செல்லும் மாகாண அரசுகளும் அவரது பாதுகாப்புக்கான முழு பொறுப்பை ஏற்கும். மேலும், நாட்டின் மிகச் சிறந்த மருத்துவ வசதிகளும், முன்னணி மருத்துவர்களின் சேவைகளும் முஷாரபுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அவர் நாடு திரும்பியதும் தங்குவதற்கு வசதியாக, தற்போது அரசால் சீல் வைக்கப்பட்டுள்ள அவரது பண்ணை வீட்டை திறக்க உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதி நிஸார் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து