முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார் குறித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஆதார் தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பளித்துள்ள சுப்ரீம் கோர்ட், அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான். ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது, அதேசமயம் மக்களின் தனிப்பட்ட தகவல்களை உரியமுறையில் பாதுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது, அதற்கு ஏற்ற வகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.

1) எந்த ஒரு தனியார் நிறுவனங்களும் உங்கள் ஆதார் விவரங்களை கேட்கக் கூடாது.
2) தனியார் நிறுவனங்களுக்கு தகவல்களை தர அனுமதி தரும் ஆதார் சட்டத்தின் 57-வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது.
3) மொபைல் போன் நிறுவனங்களுக்கு ஆதார் எண் தர வேண்டிய அவசியமில்லை.
4) வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டியதில்லை.
5) வங்கிகளுக்கு இனிமேல் ஆதார் எண் வழங்க வேண்டிய அவசியம் இல்லை.
6) பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆதார் எண்ணை கேட்க  கூடாது.
7) வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம்.
8) பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்.
9) அரசு மானியம், உதவி பெற உங்களுக்கு தகுதி இருந்தால் ஆதார் எண்ணை காட்டி அதனை தடுக்க முடியாது.
10) தனிநபரின் தகவல்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து