முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார் சட்டத்தை நிதி மசோதாவாக நிறைவேற்றியது அரசியலமைப்பு மோசடி - மத்திய அரசுக்கு நீதிபதி சந்திரசூட் குட்டு

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஆதார் சட்டத்தை மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்யாமல் மக்களவையில் நிதி மசோதாவாக நிறைவேற்றி இருப்பது அரசியலமைப்புச் சட்ட மோசடி, ஆதார் சட்டத்தை ரத்து செய்யவும் முகாந்திரம் இருக்கிறது என்று சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி ஜே.ஒய். சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.

ஆதார் வழக்கில் நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சிக்ரி ஆகியோர் ஒரே தீர்ப்பாக வழங்கினார்கள். இவர்கள் 3 பேருக்கும் சேர்த்து நீதிபதி சிக்ரி தீர்ப்பை வாசித்தார். மற்றொரு நீதிபதி அசோக் பூஷன் மாறுபட்ட தீர்ப்பை வழங்கவில்லை என்கிற போதிலும் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகத் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

இதில் மாறுபட்ட தீர்ப்பை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வழங்கினார். மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆதார் சட்டத்தை நிறைவேற்றிய விதமே தவறானது. புறவழியாக ஆதார் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார். அவர் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

ஆதார் சட்டத்தை நிதி மசோதாவாக மக்களவையில் நிறைவேற்றி இருந்திருக்க தேவையில்லை. அந்த மசோதாவை மாநிலங்களவைக்குக் கொண்டு செல்லாமல் மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றி ஆதார் சட்டத்தை கொண்டு வந்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. மோசடியாகும்.

அரசியலமைப்புப் பிரிவு 110 பிரிவை மீறி நிறைவேற்றப்பட்டு இருப்பதால், ஆதார் சட்டத்தை ரத்து செய்யவும் முகாந்திரம் இருக்கிறது. தகவல் சுதந்திரம், சுயஉரிமை, மற்றும் புள்ளி விவரங்கள் பாதுகாப்பு ஆகியவற்றை மீறும்வகையில் ஆதார் திட்டம் இருக்கிறது. அரசின் சலுகைகளைப் பெற ஆதார் கார்டை கட்டாயமாக்கி இருப்பது, மக்களின் தனிப்பட்ட உரிமையைப் பறிப்பதாகும். குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆதார் வழங்கும் நிறுவனத்துக்கு இருக்கிறது. ஆனால், முறையான பாதுகாப்பு அம்சம் இல்லாமல் இருக்கிறது. இவ்வாறு நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து