இலங்கைக்கு தனுஸ்கோடி கடல் வழியாக தப்ப முயன்ற பெண் அகதி உள்பட மூவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை.

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018      ராமநாதபுரம்
26 rms news 1

  ராமேசுவரம், -   ராமேசுவரம் தனுஸ்கோடி கடல்வழியாக நாட்டு படகு மூலம் சட்டவிரோதமாக  இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் அகதி மற்றும் உடந்தையாக இருந்த கார் டிரைவர்,ஏஜெண்டு ஆகிய மூவரை சுங்கத்ததுறை அதிகாரிகள் நேற்று கைது செய்து தீவிர விசாரணை  நடத்தி வருகின்றனர்.
 
 ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம்  கடற்பகுதியில் இருந்து  தனுஸ்கோடி கடல் வழியாக சட்டவிரோதமாக இலங்கைக்கு அகதிகள் செல்லவுள்ளதாகவும்,இவர்கள் ராமேசுவரம் பகுதியிலுள்ள தனியார்  தங்கு விடுதியில் தங்கியிருப்பதாகவும் இராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு  ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் பேரில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் ராமேசுவரம் பகுதியிலுள்ள தனியார் தங்கும் விடுதிகளில் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்குரிய முறையில் ஒரு விடுதியில் தங்கியிருந்த இலங்கை பெண் ஒருவரை பிடித்து  விசாரணை செய்தனர்.விசாரனையில் இலங்கை தலைநகர் கொழும்புவை சேர்ந்தவர் ரமணி (42) அகதி என்பது தெரிய வந்தது. இவர் திருச்சியிலிருந்து கார் மூலம் ராமேசுவரம் வந்ததாகவும், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆல்வின் என்பவர் படகு மூலம் இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் இலங்கைக்கு தப்பி செல்ல இங்கு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அதன் பின்னர்  வாகன ஓட்டுநர் உள்பட  மூவரையும் ராமநாதபுரம் சுங்கத்துறை கைது செய்து பின்னர் வழக்கு பதிந்தனர்.     மேலும் கைது செய்யப்பட்ட ரமணியிடம் சுங்க துறை உயர் அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்ட போது தான் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருச்சி கல்லூரியில் படிக்கும் தனது மகளை பார்பதற்க்காக விமானம் மூலம் திருச்சி வந்ததாகவும் விசா காலம் முடிந்த காரணத்தால் சட்டவிரோதமாக கள்ள தோணில் யாழ்பாணம் செல்வதற்க்காக தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆல்வின் என்பவரிடம் ரூபாய்  முப்பது ஆயிரம் கொடுத்தாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் ப்ளாஸ்டிக்கு படகிற்க்கு பதிலாக நாட்டுபடகில் செல்ல சொன்னதால் எனக்கு பயம் ஏற்பட்டது எனவே இரண்டு நாட்கள் ராமேசுவரத்தில் தங்கி பின்னர் ப்ளாஸ்டிக் படகு கிடைத்த உடன் இலங்கைக்கு செல்ல இருந்ததாக தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து