முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமுளி மலைப் பாதையில் மீண்டும் மண் சரிவு கம்பம்மெட்டு வழியாக கேரளா செல்ல அறிவுரை.

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018      தேனி
Image Unavailable

  கம்பம்,- தேனி மாவட்டம் குமுளி மலைப் பாதையில்  மழையால் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் சீரமைப்பு பணிக்காக நேற்று  முதல் போக்கு வரத்து தடை செய்யப்பட்டுள்ளது.கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் கம்பம்மெட்டு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டது. தமிழகம்&கேரளாவை இணைக்கும் லோயர் கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ.து£ர மலைப்பாதையில் கன மழையால் கடந்த ஆக 15ல் இறைச்சல் பாலம் அருகேயும் கொண்டை ஊசி வளைவு,மாதா கோவில் வளைவு அருகேயும் மண் சரிவு ஏற்பட்டு தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைத்து போக்குவரத்து துவங்கியது.நேற்று முன் தினம் பெய்த கன மழையால் மாதா கோவில் வளைவு அருகே மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது.இதை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய திட்ட இயக்குனர் முத்துடையான்,உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி ஆகியோர் குமுளி மலைப் பாதையில் ஆய்வு செய்தனர்.பின்னர் அவர்கள் கூறும் போது இந்த மலைப் பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.மேலும் பல இடங்களில் அதற்கான அபாயம் உள்ளது.இதனை நிரந்தரமாக சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனால் வாகனங்கள் இப்பாதையில் நேற்று (புதன்கிழமை முதல் இதன் வழியாக செல்ல  தடை விதிக்கப்பட்டு கம்பம்மெட்டு வழியாக கேரளா செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.இரண்டு வாரங்களுக்குள் சீரமைப்பு பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து