முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 100 நூலகங்களில் இலவச வை-பை வசதி - அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் ஒப்பந்தம்

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள 100 நூலகங்களில் வைபை வசதி இலவசமாக ஏற்படுத்தி தருவதற்காக ஏ.சி.டி நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

100 நூலகங்கள்

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

தமிழக முதல்வர், துணை முதல்வர் இருவரும் ஒருங்கிணைந்து தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். பள்ளிக் கல்வித்துறை மூலமாக இன்று எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம்,கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள நூலகம் அனைத்திற்கும் 5 ஆண்டுகளுக்கு ஏ.சி.டி. நிறுவன சி.எஸ்.ஆர். பண்ட் மூலம் இலவசமாக வைபை வசதி தர இன்று (நேற்று) ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 நூலகங்கள் பயன்பெறும். இதன் மூலம் நூலங்களில் படிப்பவர்களின் அறிவு வளர்ச்சி அதிகமாகும். மாணவர்கள் போட்டி தேர்வு எழுத மிகவும் வசதியாக இந்த வைபை வசதி இருக்கும்.

வாரத்திற்கு 3 நாட்கள்...

யூடியூப் மூலம் சுமார் 20 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தர ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் செல்போன் மூலம் டவுன்லோடு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பகுதிநேர ஆசிரியர் என்பது இரண்டு முறையாக பிரிக்கப்பட்டுள்ளளது. இதில் ஒன்று சிறப்பாசிரியர்கள். இவர்கள்தான் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். சிறப்பாசிரியர்கள் அனைவரும் பகுதி நேர ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் 16 ஆயிரத்து 500 பேர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள். சர்வ சிஷ்ய அபியான் என்ற திட்டத்தில் மத்திய அரசு வழங்கியுள்ள நிதி மூலம் முதற்கட்டமாக 5 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் பணி வழங்கப்பட்டது. அவர்களுடைய பணி என்பது வாரத்திற்கு மூன்று நாட்கள் இரண்டு மணி நேரம் பணி செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது.கூடுதலாக நிதி வேண்டும் என்று கேட்ட போது படிப்படியாக உயர்த்தி இன்று 7700 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம் செய்ய...

பகுதி நேரத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அவர்கள் விருப்படும் இடங்களுக்கு பணிமாறுதல் செய்து கொள்ள உங்கள் சங்கம் மூலம் மனு அளிக்கலாம் என்று அவர்களிடம்

தெரிவித்திருக்கிறோம். அந்த பணிகள் நிறைவு பெறும் சூழ்நிலையில் உள்ளது. இவர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை. ஏன் என்றால் இதற்கு மத்திய அரசு நிதி தருகிறது. இவர்களை பணியில் அமர்த்தும் போது பணி நிரந்தம் செய்ய வாய்ப்பு இல்லை என்றுதான் 8 ஆண்டுகளுக்கு முன்னர் பணி வழங்கப்பட்டது. தற்போது உள்ள நிதி நிலையின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை. பேராட்டம் செய்பவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது இருக்கும் நிலையை அவர்களிடம் தெரிவித்துள்ளார்கள்.

புதிய புத்தகங்கள்...

பள்ளிக்கல்வித் துறை மூலம் புதிய புத்தகங்கள் வாங்கப்பட்டுவருகிறது. இதற்காக ரூ 168 கோடி ரூபாய் உள்ளாட்சித்துறை மூலம் வர வேண்டிய நிதி வரவில்லை. தற்போது 40 கோடி வரப்பெற்றுள்ளது. இந்த நிதியிலிருந்து புதிய புத்தகங்கள் வாங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளை மேம்படுத்த அங்கு படித்த முன்னாள் மாணவர்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தோம். இதற்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது. இதுவரை 172 பேர் எங்களை அணுகியுள்ளார்கள். அவர்கள் பணிகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முறையாக ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை இரண்டு மாத காலத்திற்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாதிரி பள்ளிகளை...

ஸ்மாட் வகுப்புகளை தொடங்க வேகமாக பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு மத்திய அரசின் நிதியை பெற 6 மாத காலம் முலமைச்சசரின் உறுதுணையோடு பெருமுயற்சி செய்யப்பட்டுள்ளது. விரைவாக ஸ்மாட் வகுப்புகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 32 மாவட்டங்களில் தலா 50 லட்சம் செலவில் மாதிரி பள்ளிகளை அமைக்க பணிகளை துவக்கியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து