முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்: கர்நாடக முதல்வர் குமாரசாமி பேட்டி

வியாழக்கிழமை, 27 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,கர்நாடகாவில் எனது தலைமையிலான ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

சிக்கல் எழுந்ததால் பதட்டம்...கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சி அமைந்து 4 மாதங்கள் ஆகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து, பா.ஜனதாவுக்கு சாதகமாக செயல்பட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாயின. இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது. அடுத்த சில நாட்களில் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறினார். இதனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் பதற்றம் தொற்றிக்கொண்டது.

இந்தநிலையில் இது குறித்து கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி செய்தியார்களிடம் கூறியதாவது: தகவல் தவறு கர்நாடகாவில் எனது தலைமையிலான ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். கர்நாடகாவில் நிச்சயமற்ற அரசியல் சூழல் இல்லை. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சிக்கு போவதாக வந்த தகவல் தவறானது. பா.ஜ.க. காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை ஸ்திரமற்றதாக்க முயற்சிக்கிறது எனக்கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து