முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பாரம்பரிய நடைப்பயணம் : அமைச்சர் வெல்லமண்டி.என்.நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 27 செப்டம்பர் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை,- உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலா தளங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற பாரம்பரிய நடைபயணத்தை மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோயில் கிழக்கு வாசலிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன்,  தலைமையில், சுற்றுலா ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் .வெ.பழனிக்குமார்,  மற்றும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர்  .வி.வி.இராஜன்செல்லப்பா ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்  .வெல்லமண்டி.என்.நடராஜன்   கொடியசைத்து துவக்கி வைத்தார்.
 நிகழ்ச்சியில் மதுரை மாவட்டத்திலுள்ள சுற்றுலா மற்றும் ஹோட்டல் நிர்வாகம் தொடர்பாக கல்வி பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 600 பேர் கலந்து கொண்ட சுற்றுலா தளங்கள் குறித்த பாரம்பரிய விழிப்புணர்வு நடைபயணமானது அருள்மிகு மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு வாசலில் துவங்கி, விட்டவாசல் வழியாக, தேர்முட்டி, விளக்குத்தூண், மகால் வடம்போக்கித்தெரு வழியாக திருமலை நாயக்கர் அரண்மனை சென்றடைந்தது.  இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், கரகாரட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் போன்ற நடனங்களும், நாதசுவரங்கள், மேளதாளங்கள் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன.  மேலும் இந்த நடைபயணத்தில் மாணவ, மாணவிகள் சுற்றுலா தளங்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். 
 இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி)  .கே.எம்.பிரவீன்குமார், , சுற்றுலாத்துறை இணை இயக்குநர் திரு.புஷ்பராஜ்  , துணை ஆட்சியர் (பயிற்சி) திரு.கோட்டக்குமார் , மாவட்ட சுற்றுலா அலுவலர் சோ.மு.ஸ்ரீபாலமுருகன், சுற்றுலா தொழில் முனைவோர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், சுற்றுலா ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து