பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை மூன்று கப்பல்கள் கடந்து சென்றன. மாவட்ட ஆட்சியர் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்.

வியாழக்கிழமை, 27 செப்டம்பர் 2018      ராமநாதபுரம்
27 rms news

ராமேசுவரம்,- சென்னை துறைமுகத்திலிருந்து மும்பை துறைமுக பகுதிக்கு செல்வதற்காக ஒரு இழுவை கப்பல் மற்றும் மிதவை கப்பல் ஒன்று பாம்பன் வடக்கு கடற்கரைப்பகுதிக்கும்,அதுபோல மும்பையிலிருந்து காக்கி நாடா துறைமுக பகுதிக்கு செல்தற்காக இழுவைக்கப்பல் ஒன்று பாம்பன் தெற்கு கடல் பகுதிக்கு நேற்று வந்து சேர்ந்தன.இந்த மூன்று கப்பல்களும் ரயில் தூக்கு பாலத்தை கடந்து அந்த அந்த பகுதிக்கு செல்வதற்காக பாலம் பராமரிப்பு அகதிகாரிகளின் அனுமதிக்கக கடலில் நங்கூறமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.இந்நிலையில் பாலம்,துறைமுக அதிகாரிகள்  அனுமதி கிடைத்ததால் நேற்று பகலில் மூன்று கப்பல்களும் அந்தந்த பகுதிக்கு  புறப்பட்டு தூக்கு பாலத்தை  சென்றன.இந்த கப்பல்கள் பாலத்தை கடந்து சென்றபோது ராமேசுவரம் தனுஸ்கோடி மற்றும் திருக்கோவிலுக்கு வந்த பக்தர்களும்,சுற்றுலா வாசிகளும்  அதுபோல ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஆகியோர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து