முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் விவகாரம்: பிரதமர் மோடிக்கு சரத்பவார் ஆதரவு

வெள்ளிக்கிழமை, 28 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை மக்கள் சந்தேகப்படுவார்கள் என நான் எண்ணவில்லை, அந்த ஒப்பந்தத்தில் உள்ள தொழில்நுட்ப அம்சங்களை மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் கோருவது அர்த்தமற்றது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.ரபேல் போர் விமான விவகாரத்தில் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், பிரதமர் மோடிக்கு திடீர் ஆதரவு அளித்துள்ளார். இந்தி

தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, அந்த ஒப்பந்தத்தில் உள்ள தொழில்நுட்ப அம்சங்களை மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் கோருவது அர்த்தமற்றது. அதே சமயம், விலை விவரங்களை வெளியே கூறுவதால் ஒப்பந்தத்துக்கோ அல்லது அரசுக்கோ எந்த பாதிப்பும் நெருக்கடியும் ஏற்படப் போவதில்லை.ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை மக்கள் சந்தேகப்படுவார்கள் என நான் நம்பவில்லை. இந்த விவகாரத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் முரண்பட்ட தகவல்கள் தான் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கியுள்ளன என்று அவர் தெரிவித்தார். சரத் பவாரின் இந்த ஆதரவுக்கு பா.ஜ.க. தலைவர் அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து