முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள வெள்ள நிவாரணத்திற்கு தனி வரி விதிக்க 7 பேர் குழு: ஜெட்லி

வெள்ளிக்கிழமை, 28 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,கேரள வெள்ள நிவாரணத்திற்கு தனிவரி விதிக்க ஆலோசனை வழங்குவதற்காக ஏழு பேர் கொண்ட அமைச்சரவைக் குழு அமைக்கப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தெரிவித்தார்.

30-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது, கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு முன்னிட்டு செஸ்வரி வசூலிக்கலாம் என்ற கோரிக்கையை பரிசீலனை செய்வதற்காக ஜி.எஸ்.டி. குழு நேற்று கூடியது. உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்துரையாடிய இக்கூட்டத்தில், வெள்ளம் காரணமாக கேரளாவில் புனரமைப்புக்கான செலவினங்களை சந்திப்பதற்காக சிறப்பு வரி அல்லது செஸ் எனப்படும் தனி வரி விதிக்கலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

பேரழிவு நிவாரணம் வழங்குவதற்கான மத்திய அரசுக்கு தேவையான கூடுதல் நிதி ஆதாரத்தை உயர்த்துவதற்கு இது உதவும். தனி வரி விதிப்பதற்கான ஆலோசனை வழங்குவதற்காக ஏழு பேர் கொண்ட அமைச்சரவைக் குழுவை அமைக்க சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு தொடர்பான இறுதி முடிவெடுக்கும் ஜி.எஸ்.டி. உயர்மட்டக்குழு இத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. சிறப்பு அல்லது தனி வரி தொடர்பாக உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காக இதையே ஒரு தொடக்கமாகக் கொண்டு அமைச்சரவைக்குழு அமைக்கப்பட உள்ளது.

மேலும் ஜி.எஸ்.டி. கவுன்சில், வருமான பரிவர்த்தனை போக்குகளையும் மாநிலத்தில் ஏற்படும் பற்றாக்குறைகளையும் ஆய்வு செய்ய உள்ளது. இந்த ஆண்டு மாநில பற்றாக்குறை 13 சதவீதம் ஆகும். நுகர்வுத்தமை அதிகரிக்க வழிவகைகளை மேற்கொள்ளும்பட்சத்தில் இது மேலும் குறைய வாய்ப்புண்டு. பல வடகிழக்கு மாநிலங்களில் எதிர்பார்ப்புக்கு மேல் ஜி.எஸ்.டி. வரிவசூல் கிடைத்துள்ளது. இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து