முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கதையின் நாயகனான காளி வெங்கட்

சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2018      சினிமா
Image Unavailable

Source: provided

"விழா" படத்தை இயக்கிய பாரதி பாலா அடுத்ததாக இயக்கும் ‘பற பற பற’ படத்தில் காளி வெங்கட் கதாநாயகனாக நடிக்கிறார்.

விழா படத்தை இயக்கிய பாரதி பாலாவின் அடுத்த படம் ‘பற பற பற’. இந்த படத்தில் காளி வெங்கட் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவரது மகன்களாக நடிக்கும் கோகுல், மதன் இருவருக்கும் முக்கிய வேடங்கள்.இவர்களுடன் மைம் கோபி, ஜான்வி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் பாரதி பாலா கூறும்போது ‘பற பற பற’ படம் முழுக்க முழுக்க பள்ளிப்பருவத்தை பற்றிய கதை. நாம் தொலைத்த பள்ளிப்பருவ நினைவுகளை மீட்டெடுக்கும். பள்ளிக்கூடங்கள் உயிர் போன்றவை. ஆனால் இப்போது அப்படி இல்லை.மனப்பாடம் செய்யும் கருவிகளை உருவாக்கும் பணியைத் தான் செய்கின்றன.

மதுரையை சேர்ந்த விவசாயியான காளி வெங்கட்டின் மகன்களை தனியார் பள்ளியில் இலவச கல்வி என்று சொல்லி சென்னை கொண்டு வருகிறார்கள்.அந்த பள்ளியில் அவர்களுக்கு நேர்ந்தது என்ன? அந்த தனியார் பள்ளியின் இலவசக்கல்வி திட்டத்தின் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? என்பதை கூறி இருக்கிறோம்.

மைம் கோபி வகுப்பில் என்னுடன் மாணவர்களாக பயின்ற நிகில் ஜெயின், ரஞ்சித் இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். ஜேம்ஸ் வசந்தன் இசையில் மண்பாண்டம் பற்றி ஒரு பாடல், பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி ஒரு பாடல், ஆசிரியரின் அருமைகளை சொல்லும் ஒரு பாடல், மாணவர்களின் உளவியல் பற்றி ஒரு பாடல் உள்ளிட்ட 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன’ என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து