முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியின் ஆன்மீக குரு எனக்கூறி சலுகைகளை அனுபவித்த கதக் ஆட்டக்காரர் கைது

சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,பிரதமர் நரேந்திர மோடியின் ஆன்மீக குரு என்று கூறி பல்வேறு மாநிலங்களில் வி.ஐ.பி சலுகைகளை அனுபவித்து வந்த கதக் ஆட்டக்காரர் புல்கித் மகாராஜை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.இது குறித்து கூடுதல் காவல் ஆணையர் ராஜீவ் ரஞ்சன் கூறும் போது, புல்கித் மிஸ்ரா என்று அழைக்கப்படும் புல்கித் மகராஜ் மேற்கு டெல்லியின் ரோஹினி க்ரைம் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மோடியின் ஆன்மீக குரு என்று எல்லோரின் மத்தியிலும் கூறி வந்தவர் மகராஜ். அவர் மத்திய அமைச்சர்களுடனும் ஜனாதிபதியுடனும் இருக்கும் படங்களை அதிகாரிகளிடம் காண்பித்து அவர்களை நம்ப வைத்துள்ளார்.

அவர் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லும் போது, தனக்கு வி.ஐ.பி. அந்தஸ்து உள்ளிட்ட அரசு சலுகைகள் வேண்டும் என்று மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு பேக்ஸ் அனுப்புவார். மத்திய கலாச்சாரத் துறையின் சார்பாக போலியான அதிகாரபூர்வக் கடிதங்களையும் மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுக்கு அனுப்பி உள்ளார் மகராஜ்.ஏற்கெனவே ஆகஸ்ட் மாதத்தில் அவரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கிரைம் பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு மகராஜால் சரியான பதில்களை அளிக்க முடியவில்லை. வி.ஐ.பி. சலுகைகள் கோரிய அவரிடம் போதுமான ஆதாரங்களும் இல்லை. அதனால் அவரைக் கைது செய்துள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து