முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு செலவில் பெண்களுக்கு 95 லட்சம் சேலைகள் தேர்தல் ஆணைய உத்தரவால் சந்திரசேகர ராவ் திட்டம் முடக்கம்

சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,தெலுங்கானாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காபந்து முதல்வராக உள்ள சந்திரசேகர் ராவ் அரசு செலவில் பெண்களுக்கு 95 லட்சம் சேலைகளை வழங்க முடிவு செய்திருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் இந்த திட்டம் முடங்கியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் சட்டப்பேரவையை கலைப்பதாகக் கடந்த மாதம் முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். இதைத்தொடர்ந்து அங்கு காபந்து முதல்வராக சந்திரசேகர் ராவ் பதவியில் நீடித்து வருகிறார். இந்த நிலையில் வரவிருக்கும் தேர்தலையொட்டி நலிந்தவர்களுக்கு இலவச சேலைகள் வழங்குவதாக கூறி 95 லட்சம் சேலைகளை தெலுங்கானா அரசு கொள்முதல் செய்துள்ளது. இதற்காக 280 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நவராத்தி கொண்டாட்டத்தின் போது இவற்றை விநியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

இதுபோலவே 11 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த 57 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி நிவாரண உதவியாக 4 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கவும் திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக அறிவித்த உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து, தேர்தல் நடந்து முடிந்து, புதிய ஆட்சி அமைக்கும் வரை தொடரும் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

முன்கூட்டியே தேர்தல் நடத்தும் வகையில் சட்டப்பேரவையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடியும் முன் கலைத்தால்கூட, கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்று விளக்கம் அளித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் எந்த நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியாத நிலைக்கு சந்திரசேகர் ராவ் அரசு தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளி வருவதற்கு சற்று நேரத்துக்கு முன்னதாக சந்திரசேகர் ராவின் மகன் ராமராவ் அவசர அவசரமாக சில பெண்களுக்கு சேலைகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். எனவே பெண்களுக்கு சேலை வழங்கும் திட்டம் முன்கூட்டியே தொடங்கப்பட்டு விட்டதாகவும் அதனை முழுமையாக செய்து முடிக்க தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என தெலுங்கானா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து