முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோஷம் போட்டதை தடுத்ததற்காக மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கோரிய ஆசிரியர்

சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

போபால்,கோஷமிடக்கூடாது என்று சொன்னது ஒரு குற்றமா? அதற்காக ஒரு பேராசிரியரை படிக்கும் மாணவர்கள் தங்கள் காலில் விழ வைக்கும் அதிர்ச்சியும் அவமானமும் நிறைந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலம் மாண்டசூர் பகுதியில் ராஜீவ் காந்தி முதுகலை அரசுக் கல்லூரி இயங்கி வருகிறது. கடந்த புதன்கிழமையன்று இங்கு படிக்கும் ஏ.பி.வி.பி. மாணவர்களுக்கு பி.எஸ்.சி. 4-ம் பருவ தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்காக கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுக்க மாணவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி, முதல்வரின் அறையை நோக்கி கோஷமிட்டுக் கொண்டே சென்றனர்.

அந்த நேரம் பார்த்து, பேராசிரியர் தினேஷ் குப்தா என்பவர் தனது வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் முதல்வர் அறைக்கு செல்வதை விட்டு தினேஷ்குப்தா வகுப்பறைக்கு வெளியே நின்று சத்தமாக கோஷமிட்டனர். மாணவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் போடாமல், பாரத் மாதா கீ ஜே, வந்தே மாதரம் உள்ளிட்ட கோஷங்களையும் எழுப்பினர். அப்போது பேராசிரியர் தினேஷ் மாணவர்களிடம் கோஷம் போடாதீங்கப்பா. என்னால் பாடம் நடத்த முடியல என்றார்.இதைக்கேட்ட அந்த மாணவர்கள்,  பாரத் மாதா கீ ஜே, வந்தே மாதரம் போன்ற கோஷங்களை நிறுத்த சொல்கிற இந்த பேராசிரியர் தினேஷ் ஒரு தேச துரோகி, நீ தேச விரோதி என போலீசில் புகார் கொடுத்து உள்ளே தூக்கி வைத்து விடுவோம் என்று மிரட்டினார்கள். மேலும் இப்படிப்பட்ட ஒரு தேச துரோகி, மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியர் தினேஷ், கோஷமிட்ட மாணவர்களின் காலில் தனித்தனியாக விழுந்து மன்னிப்பு கேட்க தொடங்கினார். இதை மாணவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவேயில்லை. ஆசிரியர் காலில் விழும் சமயத்தில் மாணவர்கள் அவரை தடுத்தனர். ஆனாலும் ஆசிரியர் ஒவ்வொருத்தர் காலிலும் விழுந்து கொண்டே இருந்தார். சில மாணவர்கள் காலில் விழும் சமயத்தில் மெல்ல விலகி நின்றனர். பேராசிரியர் காலில் விழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து