முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2022- ம் ஆண்டிற்குள் கல்வித் துறையை மேம்படுத்த ரூ. ஒரு லட்சம் கோடி செலவு செய்ய திட்டம்: பிரதமர் மோடி

சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,கல்வித் துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வரும் 2022-ம் ஆண்டிற்குள் ரூ.ஒரு லட்சம் கோடி செலவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் கல்வி தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது:-கல்வியும், அறிவும் புத்தகங்களுடன் மட்டும் நின்று விடாது. மனிதர்களின் அனைத்து பரிணாமங்களிலும் வளர்ச்சி பெற செய்வதே கல்வியின் நோக்கம். இது புது கண்டுபிடிப்புகள் இல்லாமல் சாத்தியம் இல்லை. நாட்டில் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. கல்வியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, கல்விதுறையில் புத்தாக்க முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இதன் மூலம் கல்வி துறையில் 2022-ம் ஆண்டிற்குள் ரூ. ஒரு லட்சம் கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளோம். உயர்கல்வி நிறுவனங்கள் அமைப்பதற்காக, உயர்கல்வி நிதி அமைப்பையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தேசிய உயர் கல்வி பிரசாரத்திற்காக நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளோம். ஐ.ஐ.எம். அமைப்பிற்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கி உள்ளோம். இதனால் படிப்பு, ஆசிரியர் நியமனம், குழு உறுப்பினர்கள் நியமனம், நிறுவனத்தை விரிவாக்கம் செய்வது போன்றவற்றை அந்த அமைப்பே முடிவு செய்து கொள்ளும். இவற்றின் செயல்பாட்டில் அரசு தலையிடாது. இந்திய உயர்கல்வி துறையில் இந்த முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து