முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் உலக இதய தின பேரணி

சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்-- கொடைக்கானலில் இதய தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
 கொடைக்கானல் ரோட்ரி சங்கம், ஹேவ் எ ஹார்ட் பவுன்டேசன், செட்டி நாடு மருத்துவமனை உள்ளிட்ட அமைப்பின் சார்பில் உலக இதய தின விழிப்புணர்வு பேரணி கொடைக்கானல் ஏரிப் பகுதியில் நடந்தது.
 கொடைக்கானலைச் சேர்ந்த அனைத்து பள்ளிகளின் மாணவ மாணவிகள், தங்கும் விடுதி, உணவு விடுதி பணியாளர்கள், தொண்டு நிறுவனத்தினர், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.
 இந்த பேரணியினை ரோட்டரி சங்க கவர்னர் கண்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கொடைக்கானல் ரோட்டரி சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் தனசேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹேவ் எ ஹார்ட் பவுன்டேசன் சேர்மன் ஹர்ஜானி, கொடைக்கானல் கிறிஸ்தவ கல்லூரி தாளாளர் சாம் ஆபிரகாம், அரச மருத்துவமனை டாக்டர்கள், பள்ளி முதல்வர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதயத்தின் முக்கியத்துவத்ததை வலியுறுத்தும் விதமாக இந்த பேரணி நடத்தப்பட்டது. கொடைக்கானல் ஏரியினை சுற்றி 5 கி.மீட்டர் தூரம் இந்த பேரணி நடந்தது. கொடைக்கானல் போட் கிளப் அருகில் இந்த பேரணி முடிவடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து