முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி

சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2018      தேனி
Image Unavailable

 தேனி- தேனி மாவட்டம், குச்சனூர் பேரூராட்சியில் சுற்றுலாத்துறையின் சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட சுற்றுலா குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்  கொடியசைத்து துவக்கி வைத்து, “சுற்றுலாவின் எண்ப பரிமான வளர்ச்சி” என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
      மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,  உலக சுற்றுலா தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி உலகெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகளின் சபையின் உலக சுற்றுலா நிறுவனத்தின்  ன் மூலமாக இந்த செப்டம்பர் 27-ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வருடம் தோறும் உலக முழுவதும், கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுற்றுலா நிறுவனத்தினால் ஆண்டுதோறும் ஒரு கருத்து வெளியிடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இந்தாண்டு “சுற்றுலாவின் எண்ப பரிமான வளர்ச்சி” என்ற கருத்தினை தலைப்பாக கொண்டுள்ளது.
சுற்றுலா என்பது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொழுதுபோக்கிற்காகவோ அல்லது புனிததலங்களுக்கு செல்வதுமட்டுமின்றி, சுற்றுலா சாகச சுற்றுலா, வணிக சுற்றுலா, விளையாட்டு சுற்றுலா போன்ற பல்வேறு வகையான சுற்றுலாக்கள் உள்ளது. முந்தைய காலகட்டத்தில் சுற்றுலா செல்வதற்கு போக்குவரத்து, விடுதி போன்ற பல விஷயங்களுக்கு நாம் நேரடியாக சென்று பயணம் செய்யும் போது   தங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால், இன்றைய விஞ்ஞான காலகட்டத்தில் தற்போது உட்காந்த இடத்திலேயே கைபேசி வாயிலாக தங்கும் விடுதி, போக்குவரத்து, உணவு போன்றவற்றை முன்பதிவு செய்து சுற்றுலா செல்வது மிகவும் எளிமையாக உள்ளது.
சுற்றுலாத்துறை தமிழக மக்களின் மன மகிழ்வுக்கு மூலக் கூறாகவும், வேலை வாய்ப்பினையும், அன்னியச் செலாவணியையும் ஈட்டுத் தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்ற சுற்றுலாத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து எண்ணற்ற வளர்ச்சித்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசால் தமிழ்நாட்டில் உள்ள மரபுச்சின்னங்கள் மற்றும் பழைமை வாய்ந்த சுற்றுலாத்தலங்கள் பாதுகாக்கப்பட்டு, பழமை மாறாமல் அனைத்து புரதான சின்னங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.  சுற்றுலா தலங்களின் முக்கியத்துவம் குறித்து நமது வருங்கால சந்ததியினர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் சுற்றுலாத்தலங்களை பாதுகாத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்,    தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட சுற்றுலா அலுவலர் தி.உமாதேவி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) எஸ்.சேதுராமன், உதவி செயற்பொறியாளர் கருப்பையா, உத்தமபாளையம் வட்டாட்சியர் உதயராணி, உதவி சுற்றுலா அலுவலர் இ.பாஸ்கரன், குச்சனூர் பேரூராட்சி செயல் அலுவலர் கா.பாலசுப்பிரமணியன், குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் செயல் அலுவலர் மு.கிருஷ்ணவேனி, தக்கார் பா.பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து