பரமக்குடியில் புதிய வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2018      ராமநாதபுரம்
29 parama news

பரமக்குடி   :நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்கள் பெயர்களை சேர்த்தல்,திருத்தம்,நீக்கம் செய்வதற்கான முகாம்கள் நடந்து வருகின்றன.
 இந்நிலையில் பரமக்குடியில் வட்டாட்சியர் தேர்தல் பிரிவு சார்பில் அரசு கலைக் கல்லூரி மற்றும் ஆயிர வைசிய கல்வியல் கல்லூரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பான முகாம் நடந்தது.முகாமிற்கு பரமக்குடி வட்டாட்சியர் பரமசிவன் தலைமை தாங்கி, 18 வயது நிரம்பிய மாணவ,மாணவிகள் அவசியம்  வாக்காளர் பட்டியலில் சேர வேண்டுமென வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
 தொடர்ந்து வட்டாட்சியர் பரமசிவன், துணை வட்டாட்சியர் ( தேர்தல் பிரிவு) சம்பத் ஆகியோர் மாணவ, மாணவிகளிடம் வாக்காளர் பட்டியலில் இணைவதற்கான விண்ணப்பத்தினை பெற்றுக் கொண்டனர்.இந்நிகழ்ச்சிகளில் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்,பேராசிரியைகள் கலந்து கொண்டனர்.
 முகாமிற்கான ஏற்பாடுகளை வருவாய் ஆய்வாளர் ராம்குமார் சிறப்பாகச் செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து