முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை தொடரில் 342 ரன்கள்: தொடர் நாயகன் பட்டம் வென்றார் ஷிகர் தவான்

சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

துபாய் : ஆசிய கோப்பை போட்டியில் அடுத்தடுத்து அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 5 ஆட்டங்களில் 342 ரன்கள் குவித்து ஆசிய கோப்பை தொடர் நாயகன் விருதை கைப்பற்றியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பையில் அதிரடியாகவும், பரபரப்பாகவும் விளையாடிய இந்திய அணி தனது வெற்றியை நிலைநாட்டி கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில், அதிரடியாக விளையாடி தனது திறமையை அனைத்து வீரர்களும் வெளிப்படுத்தினர்.

ரோஹித் 2-வது இடம்

இந்த ஆசிய கோப்பை விளையாட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோஹித் சர்மா, 1 சதம், 2 அரை சதத்துடன் 317 ரன்கள் குவித்து 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

தவான் முதல் இடம்

இந்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டம் மூலம் தொடக்க ஆட்டக்காரர் தவான் 5 ஆட்டத்தில் விளையாடி 342 ரன் குவித்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சராசரி 68.40 ஆகும். இரண்டு சதம் அடித்து, அதிகபட்சமாக 127 ரன்கள் குவித்துள்ளார். இந்த சிறப்பான ஆட்டம் மூலம் தவான் முதலிடத்தை பிடித்து, தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றியுள்ளார்.

குல்தீப் அபாரம்

வங்காளதேச வீரர் முஷ்பிகுர் ரகீம் 1 சதத்துடன் 302 ரன் எடுத்து 3-வது இடத்திலும், ஆப்கானிஸ் தானை சேர்ந்த முகமது‌ஷசாத் 268 ரன் எடுத்து 4-வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 6 ஆட்டத்தில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 45 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்துவீச்சாகும். இதேபோல, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத்கானும், முஷ்டாபிசுர் ரகுமானும் தலா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். இருவரும் 5 ஆட்டத்தில் இந்த விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். மற்ற இந்திய வீரர்களில் பும்ரா 8 விக்கெட்டுகளும், ஜடேஜா 7 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து