ராமேசுவரம் திருக்கோவிலில் ஹெச்.ராஜா குடும்பத்துடன் சுவாமி தரிசனம்.

ஞாயிற்றுக்கிழமை, 30 செப்டம்பர் 2018      ராமநாதபுரம்
30 hrajan ews

  ராமேசுவரம்-ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பா.ஜ.கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குடும்பத்துடன் வருகை தந்தார். அவரை ராமேசுவரம் பா.ஜ.கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் முரளிதரன் வரவேற்றார்.பின்னர் ராமேசுவரம் அகினிதீர்த்தம் கடற்கரையில் புனித நீராடி,திருக்கோவிலுள்ள 22 புனித தீர்த்தத்தில் புனித நீராடினார்.பின்னர் அவரது தந்தை இறந்து ஒரு ஆண்டு காலம் நிறைவு பெற்றதால் தந்தைக்கு புரோகிதர் வீட்டில் திதி பூஜை கொடுத்து வணங்கினார்.பின்னர் திருக்கோவிலிலுள்ள ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.அங்கு ஹெச்,ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர்க்கு சன்னதி குருக்கள்கள் மாழை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.பின்னர் திருக்கோவில் மூன்றாம் பிரிகாரம் பகுதியில் வலம் வந்து பார்வையிட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து