தூய்மையே சேவை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்து ஓடினார்

ஞாயிற்றுக்கிழமை, 30 செப்டம்பர் 2018      ராமநாதபுரம்
30 rmd pro

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் தூய்மை பாரத் இயக்க திட்டத்தின்கீழ் தூய்மையே சேவை மாரத்தான் ஓட்டத்தினை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்து ஓடினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் தூய்மை சேவை -2018 என்னும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற  தூய்மையே சேவை மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் துவக்கி வைத்து மாரத்தானில் பங்கேற்று 5 கிலோ மீட்டர் தூரம் கடந்து ஓடினார். இதன்பின்னர் அவர் பேசியதாவது:- மத்;திய , மாநில அரசுகள்,  மகாத்மா காந்தி அவர்களின் 150ஆவது பிறந்தநாள் நிகழ்வினை கொண்டாடும் விதமாகவும், சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தூய்மை பாரத இயக்கம் என்ற திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றது. பாரத பிரதமரின் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ்,  தமிழகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம் என்ற நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு நமது மாவட்டத்தை எடுத்துக்காட்டாக மாற்றிட  பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.  அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை உள்ளாட்சி அமைப்புகளிலும் மேற்குறிப்பிட்ட நாட்களில் தூய்மைப் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் ராமநாதபுரத்தில் தூய்மையே சேவை - விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெறுகின்றது.  இப்போட்டியில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், மகளிர் அனைவரும் இன்று நமது மாவட்டத்தில் நடைபெறும் இம்மாரத்தான் போட்டியின் மூலம் நமது மாவட்டத்தில் உள்ள 15 லட்சம் மக்களுக்கு முழுசுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
     இதுதவிர பொதுமக்கள் ஒவ்வொருவரும் குப்பைகளை மொத்தமாக கொட்டாமல் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அதற்கென உள்ள குப்பைத் தொட்டிகளில் போடுதல் அவசியமாகும்.  மேலும் அவரவர் தாங்கள் தங்களது சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்து பராமரிப்பதோடு, சுற்றத்தாருக்கும் சுகாதாரத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். அனைத்து  இடங்களிலும் கழிப்பிடம் கட்டப்பட்டிருந்தால்  மட்டும் போதாது. இல்லம், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் கழிப்பறை பயன்படுத்துதலை ஊக்குவித்திடல் வேண்டும்.  நல்ல சுத்தமாக, சுகாதாரமாக நமது அனைத்து பகுதிகளுக்கும்  தூய்மையே சேவை  குறித்து விழிப்புணர்வு வழங்கிட வேண்டும். இவ்வாறு பேசினார்.  
இம்மாரத்தான் போட்டியானது ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து துவங்கி, பழைய பேருந்து நிலையம், பாரதி நகர், டி.பிளாக் வழியாக 5 கிலோ மீட்டர் பயணித்து பட்டணம்காத்தான் நான்கு வழிச்சாலையில் நிறைவு பெற்றது.  இப்போட்டியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என இருபாலரும் கலந்து கொண்டனர். 35 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கே.லோகேஸ் முதல் இடத்திற்கும், கே.பிரசாத் இரண்டாம் இடத்திற்கும்;, வைத்தீஸ் முருகன் மூன்றாம் இடத்திற்கும்; தேர்ச்சி பெற்றனர்.  35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் ஜே.சரவணன் முதல்  இடத்திற்கும், டி.நாகநாதன் இரண்டாம் இடத்திற்கும், வி.தட்சிணா மூர்த்தி மூன்றாம் இடத்திற்கும் தேர்ச்சி பெற்றனர்.
அதேபோல 35 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் எஸ்.லெட்சுமி முதல் இடத்திற்கும், ஏ.ஸ்ரீவித்யா இரண்டாம் இடத்திற்கும், ஜே.மதுமதி மூன்றாம் இடத்திற்கும் தேர்ச்சி பெற்றனர். 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் எஸ்.மரியா ஆக்னஸ் முதல் இடத்திற்கும், ஏ.பைக்யின் இரண்டாமிடத்திற்கும், எஸ்.அழகுராணி மூன்றாமிடத்திற்கும் தேர்ச்சி பெற்றனர். இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் ஜானிடாம் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹெட்சி லீமா அமாலினி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆ.செல்லத்துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நாகேஸ்வரன், மாவட்ட விளையாட்டு  மற்றும் இளைஞர் நல அலுவலர் பா.பிராங்பால் ஜெயசீலன் உள்பட அரசு அலுலவர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து