முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேதர் ஜாதவுக்கு மீண்டும் காயம்

ஞாயிற்றுக்கிழமை, 30 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

துபாய்,,ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் கேதர் ஜாதவுக்கு தொடையில் மீண்டும் காயம் ஏற்பட்டது.
ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாதவ், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று மாதங்களாக அணியில் இடம் பெறாமல் இருந்த ஜாதவ் குணமாகி தற்போது தான் சேர்க்கப்பட்டிருந்தார். ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் வங்கதேசத்துடன் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வந்த நிலையில் இடையிலேயே தொடையில் காயமுற்று வெளியேற நேர்ந்தது. பின்னர் இறுதி கட்டத்தில் மீண்டும் திரும்பி அணியை வெற்றி பெறச் செய்தார்.

ஏற்கெனவே இருந்த தொடை காயம் மேலும் அதிகமாகி விட்டதால், அவர் வெளியேற நேர்ந்தது. வரும் நாள்களில் அவருக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை தரப்படும் என பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கெனவே காயத்தால் இங்கிலாந்து சுற்றுப் பயணம் முழுவதும் ஜாதவால் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து