முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

91வது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் சிவாஜி கணேசனின் படத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். மரியாதை

திங்கட்கிழமை, 1 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,நடிகர் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு அரசு சார்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.நடிகர் சிவாஜி கணேசனின் 91வது பிறந்த நாள் தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது.  இதனை அடுத்து சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் அவரது உருவ படத்திற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க. அரசே.... அதன்பின் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் முதன்முறையாக அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.  அரசு விழாவாக அறிவித்து நடிகர் சிவாஜி கணேசனுக்கு பெருமை சேர்த்தது அ.தி.மு.க. அரசே என கூறினார். அவர் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படியே மெரீனாவில் இருந்து சிலை நீக்கப்பட்டு அடையாறில் வைக்கப்பட்டது.  அவரது சிலையை மீண்டும் மெரீனாவில் வைக்கும்படி பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை வருமென்றால் அதனை அரசு பரிசீலனை செய்யும் என்றும் அவர் கூறினார்.

மகிழ்ச்சி அளிக்கிறது...இதேபோன்று நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு ஆகியோரும் சிவாஜி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு, சிவாஜி கணேசனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து