முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு கொறடா புகார் எதிரொலி: கருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கு நோட்டீஸ் வழங்க முடிவு? சபாநாயகர் தனாபால் நடவடிக்கை

திங்கட்கிழமை, 1 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,அரசு கொறடா ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில்  கருணாஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பிறகு சபாநாயகர் தனாபால் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பலர் கண்டனம்....அறந்தாங்கி தொகுதியில் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ். சமீபத்தில் அவர், வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வரை அவதூறாக பேசியதாக எம்.எல்.ஏ. கருணாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார். கருணாசின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், அவர் எம்.எல்.ஏ.வாக நீடிக்க வேண்டுமா? என பலரும் கேள்வி எழுப்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார்.

ஆலோசனை...இந்நிலையில், அ.தி.மு.க. கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. பதவியில் உள்ள கருணாஸ் முதல்வரை அவதூறாக பேசியது குறித்து நடவடிக்கை எடுக்க அரசு கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் சபாநாயகர் தனபாலுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சபாநாயகர் தனபாலுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை மேற்கொண்டார். இவர்களுடன் அமைச்சர் தங்கமணி மற்றும் கொறடா ராஜேந்திரன் ஆகியோரும் உடனிருந்தனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஆலோசனை செய்தனர்.

மேலும் 3 பேருக்கு...இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. கருணாசுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வருக்கு எதிராக பேசியது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படும் அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி, விருதாச்சலம் தொகுதி எம்.எல்.ஏ - கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து