முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்

திங்கட்கிழமை, 1 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,உள்ளாட்சி நிர்வாகத்தில் எந்த முறைகேடும் இல்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு பிரச்சாரம்...குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் சார்பாக மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்ந்த வாகனங்கள் மூலம் பிரச்சாரத்தை மேற்கொள்ளப்படுகிறது. மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று முதல் 15நாட்களுக்கு சென்னை குடிநீர் வாரிய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரைபொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளும். இவ்வாறு தெரிவித்தார

பின்னர் அமைச்சர் வேலுமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறோம். அந்த பகுதியில் உள்ள எம்.பிக்கள் எம்எல்ஏக்கள் மற்றும் மக்கள் என்ன திட்டம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றார்களோ அதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டங்களாக அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இது ஆர்பாட்ட விழா இல்லை. மக்களுக்கான விழா. எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறோம்.

எதிர்கொள்வோம்.... திருமணவிழாவாக இருந்தலும் சரி, இதற்கு முன்னாள் இருந்த தலைவர்களும் அரசியல் பேசியுள்ளார்கள். இது வழக்கமான ஒன்றுதான். எதிர்கட்சிகள் வேண்டுமென்றே குறை கூறி வருகிறார்கள். தி.மு.க. வழக்குதொடர்பாக ஏற்கனவே பதில் சொல்லியுள்ளேன். உள்ளாட்சித்துறையை பொறுத்தவரையில் நேர்மையாக விதிமுறைக்கு உட்பட்டு நடக்கிறது. எல்லா டெண்டர்களும் விதிமுறைகள் பினபற்றித்தான் வழங்கப்படுகிறது. இது குறித்து ஏதாவது வழக்கு இருந்தாலும் அதனை நாங்கள் எதிர்கொள்வோம். இவ்வாறு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து