முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணல் காந்தியடிகள் 150-வது பிறந்த நாள் விழா: கவர்னர் - முதல்வர் எடப்பாடி பங்கேற்பு

திங்கட்கிழமை, 1 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,இன்று அண்ணல் காந்தியடிகளின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் நிகழ்சியில் கவர்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

அண்ணல் காந்தியடிகள் 150-வது பிறந்த நாள் விழா இன்று தமிழக அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அண்ணல் காந்தியடிகளின்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் பங்கேற்கவுள்ளனர்.

அதற்கு முன்பாக காலை 8 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகள், பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயத்தைச் சார்ந்த சகோதர சகோதரிகள் கலந்துகொள்ளும் மிதிவண்டிப் பேரணி நடைபெறுகிறது. தீண்டாமை ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு, உலக அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தும் மிதிவண்டிப் பேரணியை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜூ அவர்கள் துவக்கி வைப்பார்கள். இப்பேரணி அண்ணல் காந்தியடிகள் சிலையில் இருந்து புறப்பட்டு கிண்டி காந்தி மண்டபம் வரை நடைபெறும்.

காலை 8 மணி முதல் 10 மணி வரை காந்தி சிலை அருகில் நூற்புவேள்வி வழிபாடு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு கிண்டி, காந்தி மண்டபத்தில் நடைபெறும் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி விழாப்பேருரையாற்றுவார்.

இவ்விழாவிற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்று முதல் 4ம் தேதி வரை காந்தி மண்டபத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக் கண்காட்சியும், இரவு 7 மணிக்கு அண்ணல் காந்தியடிகள் பற்றிய திரைப்படம் திரையிடப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து