முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பில்லையா? முன்னாள் வீரர் கங்குலி ஆச்சரியம் !

திங்கட்கிழமை, 1 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை,இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மா சேர்க்கப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட ர், 5 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் அந்த அணி பங்கேற்கிறது. அடுத்த மாதம் 4 ஆம் தேதி, முதல் டெஸ்ட் போட்டி, தொடங்குகிறது. அக்டோபர் 21 ஆம் தேதி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கி, நவம்பர் 1-ம் தேதி வரை நடக்கிறது. மூன்று போட் டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 4 ஆம் தேதி தொடங்குகிறது.

புவனேஷ்வர் குமார்...இதில் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தவான், ரோகித் சர்மா, இங்கிலாந்து தொடரில் இருந்து நீக்கப்பட்ட முரளி விஜய் இடம்பெறவில்லை. வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால், முகமது சிராஜ்  சேர்க்கப்பட்டுள்ளனர்.

விதிவிலக்கானவர்...அணி விவரம்: விராத் கோலி (கேப்டன்), கே.எல். ராகுல், பிருத்வி ஷா, மயங்க், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), விஹாரி, ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, குல்தீப், முகமது ஷமி, உமேஷ்யாதவ், முகமது சிராஜ், ஷர்துல். இந்நிலையில் ரோகித் சர்மா சேர்க்கப்படாதது குறித்து ஆச்சரியம் அடைந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இதுபற்றி அவர், ’ஆசியக் கோப்பை வென்றதற்கு வாழ்த்துகள் ரோகித். நீங்கள் விதிவிலக்கானவர். ஒவ்வொரு முறையும் டெஸ்ட் அணியில் உங்கள் பெயர் இடம்பெறாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் இடம்பெறுவது அதிக தூரத்தில் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து