முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடரை நடத்துவது தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் இடையே பிரச்சினை: ஐ.சி.சி. குழு விசாரணையை தொடங்கியது

செவ்வாய்க்கிழமை, 2 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய் : இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து எழுந்துள்ள பிரச்சினை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தகராறுகள் தீர்ப்பாயத்தின் விசாரணை தொடங்கியுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

2008 ஆம் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மட்டும் இணைந்து முழு தொடரில் விளையாடவில்லை. இருந்தாலும் மற்ற சர்வதேச தொடர்களில் இரு அணிகளும் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகளும் 24 போட்டிகளில் விளையாட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்தப் போட்டிகள் நடத்தப்படாததால் பாகிஸ்தான் அணிக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரூ.500 கோடி இழப்பீடு

இதையடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் மீறிவிட்டதாகவும் இதன் காரணமாக 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 500 கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிலும் புகார் செய்தது.

தகராறுகள் தீர்ப்பாயம்...

இந்நிலையில் இந்தப் பிரச்சினை பற்றி பேசி முடிவெடுக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தகராறுகள் தீர்ப்பாயம் முடிவு செய்தது. அதன்படி அதன் தலைவர், மைக்கேல் பிளாஃப் தலைமையில் ஜேன் பால்சன், அன்னபெல் பென்னட் ஆகியோரை கொண்ட குழு துபாயில் விசாரணையை தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சார்பாக  நஜம் ஆஜரானார். ரத்னகர் ஷெட்டி, பி.சி.சி.ஐ. சார்பில் ஆஜரானார்.

கட்டுப்படுத்த முடியாது

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்புத் தொடரின்போது கிரிக்கெட் ஒப்பந்தம் தொடர்பாக ஐ.சி.சி.யின் சர்ச்சை தீர்வுகள் குழுவிற்கு முன்பு முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தி  ஆஜரானார். எனினும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.)  பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட அரசு அனுமதிக்காத வரை இந்த ஒப்பந்தத்தை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.இந்த  விசாரணை நேற்றும் நீடித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து