முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தமிழக மக்களுக்கு எதிரான எந்தத் திட்டத்தையும் எதிர்ப்போம்- துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

செவ்வாய்க்கிழமை, 2 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஹட்ரோ கார்பன் உள்ளிட்ட தமிழக மக்களுக்கு எதிரான எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு எதிர்க்கும் என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னையில் காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் தக்கர் பாபா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தக் காந்தி நிறுவன நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டிருக்கிறோம். இந்த நிறுவனம் பல நல்ல செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது. படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்ல படிக்காதவர்களுக்கும் கூட திறன்மேம்பாட்டு பயிற்சி இவர்களால் வழங்கப்பட்டு தொழில்சார்ந்த படிப்புகளை அனுபவ ரீதியாகப் பயிற்சிகளை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வாதரத்திற்கு அடித்தளம் அமைக்கும் அரிய பணியை காந்தியடிகளின் தக்கர் பாபா நிறுவனம் செய்து வருகிறது. அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். காந்தியடிகள் வகுத்த பாதையை தொடர்ந்து இவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்குத் தமிழகத்தில் 2 இடங்களில் தொடங்க அனுமதி அளித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு துணை முதல்வர் தமிழக மக்களுக்குத் தீங்கு இழைக்கின்ற எந்தத் திட்டமாக இருந்தாலும் தமிழக அரசு அதனை முழுமையாக எதிர்க்கும். பொதுவாகத் தமிழக மக்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் எந்தத் திட்டமாக இருந்தாலும் தமிழக அரசு அதனை எதிர்க்கும். வேதாந்த நிறுவனம் தமிழகத்தில் ஆளுமையைச் செலுத்துகிறார்கள் என்பது தவறு. ஆளுமை செய்ய நீதிமன்றங்கள் மூலம் முயற்சி செய்து வருகிறார்கள். அதைத் தடுத்து நிறுத்துகிற செயல்களில் தமிழக அரசு தன்னுடைய கடமையைச் செய்து கொண்டிருக்கிறது.

கருணாசுக்கு ஆதரவாகச் செயல்படும் அனைவரும் மீதும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கருணாஸ் மற்றும் டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் கொள்கை ரீதியாக மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது. அது முறைப்படி மத்திய அமைச்சரவையில் அங்கீகாரம் பெற வேண்டும். இது எந்த அரசாக இருந்தாலும் எடுக்கவேண்டிய நடைமுறை. இது விரைவில் நடக்கும். மத்திய நதி பகிர்வில் இருந்து உள்ளாட்சிகளுக்கு வர வேண்டிய நிதி பகிர்வில் 1,350 கோடி ரூபாய் வந்து சேர்ந்து விட்டது. அதற்குரிய பணிகள் எடுக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு முழுமையாகப் பாதுகாக்கப்பட்டு தமிழகத்தில் தீவிரவாதம், நக்சலைட்டுகள் நடவடிக்கைகள் முற்றிலும் ஒடுக்கப்பட்டு விட்டன. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அறிந்து தெரிந்து புரிந்திருந்தால் அவர் தமிழக அரசிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர்கள் மீது தி.மு.க. ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டி வருகிறது. இதனை எதிர்த்து நாங்கள் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் முறியடிப்போம்.

சிலை திருட்டு எந்த ரூபத்தில் நடந்தாலும் அதனைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் பணியை பொன்மாணிக்கவேல் நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறார். அ.தி.மு.க.வில் உறுப்பினர்கள் படிவங்கள் வழங்கப்பட்டு கிட்டதட்ட ஒரு கோடியே 10 லட்சம் உறுப்பினர்கள் இதுவரை சேர்க்கப்பட்டு அவர்களுக்கு 8-ம் தேதியிலிருந்து உறுப்பினர் அட்டைகள் வழங்கப்படும். முழுமையாக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டவுடன் கழகத்தின் அமைப்பு தேர்தல் கிளை கழகத்திலிருந்து கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வரை நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து