முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் முதல் முறையாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்களுடன் ஆர்.சி புக்: திருமங்கலம் டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் வழங்கினார்:

புதன்கிழமை, 3 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- தமிழகத்தில் முதல் முறையாக திருமங்கலம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஆர்.சி புத்தகங்களை வாகன உரிமையாளர்களுக்கு திருமங்கலம் டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் வழங்கினார்.
திருமங்கலம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஓட்டிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருமங்கலம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பூர்ணலதா தலைமை வகித்தார்.திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தார்.புதிய வாகனங்களை பதிவு செய்வதற்காக வந்திருந்தவர்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு வழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் டி.எஸ்.பி.,ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விளக்கமளித்து சிறப்புரையாற்றினார். இதை தொடர்ந்து திருமங்கலம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் நிலையம் இணைந்து புதிய வாகனங்கள் பதிவு செய்பவர்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் ஆர்.சி புத்தகத்தில் சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.முற்றிலும் புதுமையான முறையில் தலை கவசம் உயிர் கவசம்,வாகனம் ஓட்டும் போது சீட்பெல்ட் அணிய வேண்டும் போன்ற சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் கொண்ட ஆர்.சி புத்தகங்களை அந்தந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு திருமங்கலம் டி.எஸ்.பி.,ராமகிருஷ்ணன் வழங்கினார்.இந்த புதிய முயற்சி தங்களுக்கு மிகவும் பயனளிப்பதாக இருப்பதாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து