முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரபிக் கடலில் உருவாகும் புயல் சின்னம்: தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு

புதன்கிழமை, 3 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் புயல் சின்னம் உருவாகுவதால் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் சின்னமாக...

இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், கர்நாடகாவிலும் வரலாறு காணாத அளவுக்கு பெய்தது. தொடர்ந்து 4 மாதங்களாக நீடித்து வரும் பருவமழை முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அரபிக் கடலையொட்டியுள்ள கர்நாடகா, கேரளா, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முழுவதுமாக முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு 6-ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது புயல் சின்னமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த மழைக்கு வாய்ப்பு

அது அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் செல்லக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக 5-ம் தேதி காலை 8.30 மணி முதல் 6-ம் தேதி காலை 8.30 மணி வரை தமிழகம் மற்றும் புதுவையிலும், கேரளாவிலும் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதன்பிறகு பலத்த மழைபெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அனேக இடங்களில் மழை

இதற்கிடையே குமரிகடல் பகுதியில் இருந்து வடக்கு கேரளா வரை பரவிய மேலடுக்கு சுழற்சி தெற்கு மராட்டியம் வரை நீடிக்கிறது. இதே போல் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து