முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்கள் இல்லாமல் பதவியில் நீடிக்க முடியுமா? சவுதி மன்னருக்கு அதிபர் டிரம்ப் சவால்

புதன்கிழமை, 3 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க் : நாங்கள் இல்லாமல் சவுதி அரேபிய மன்னரால் இரண்டு வாரங்களுக்கு பதவியில் நீடிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மிசிஸிபியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

சவுதி அரேபியா பல ஆண்டுகாலமாக அமெரக்காவின் நட்பு நாடாக இருந்து வருகிறது. மேற்காசியாவில் மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு பிரச்சினைகளிலும் அமெரிக்காவுடன் கரம் கோர்த்து செயல்பட்டு வருகிறது. ஆனால் கச்சா எண்ணெய் விவகாரத்தில் சவுதி அரேபியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது கவலையளிக்கிறது.

அந்நாட்டின் பாதுகாப்புக்கு முழு பொறுப்பையும் அமெரிக்கா எடுத்துக் கொண்டுள்ளது. அமெரிக்கா இல்லாமல் சவுதி அரேபியாவால் நாட்டை பாதுகாக்க முடியாது. நாங்கள் இல்லாமல் அந்த நாடு நீடித்து இருக்க முடியாது. சவுதி மன்னர் சல்மான் பின் அப்துலஸிஸ் எனக்கு நல்ல நண்பர் தான். ஆனால் அமெரிக்கா இல்லாமல் இரண்டு வாரங்களுக்கு கூட அவரால் சவுதி மன்னர் பதவியில் நீடிக்க முடியாது. இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து