முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்டகன் அதிகாரிகளுக்கு வந்த 2 மர்ம பார்சலில் விஷப் பவுடர் - விசாரணை குழுவை அமைத்தது அமெரிக்க அரசு

புதன்கிழமை, 3 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க் : அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனுக்கு வந்த பார்சல் ஒன்றின் காரணமாக, அந்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகி உள்ளது.

அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன்தான் உலகிலேயே பாதுகாப்பான ராணுவ தலைமையிடம் என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அடுத்து பெண்டகன்தான் அதிக வலிமை பொருந்திய இடம் ஆகும்.

இந்த நிலையில் இந்த பெண்டகனுக்கு விஷ பார்சல் ஒன்று வந்துள்ளது. இரண்டு முக்கிய அதிகாரிகளுக்கு யாரோ விஷ பார்சல் அனுப்பி உள்ளனர். இந்த பார்சல் உள்ளே சிறிய அளவில் பவுடர் கொஞ்சம் இருந்துள்ளது. பார்க்க வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த பவுடர் மிக மோசமான விஷம் ஆகும். இந்த பாய்சன், ரெசின் போன்ற ஒருவகை பாய்சன் ஆகும். இது ஆளை கொல்லக் கூடியது.

இப்படி மொத்தம் இரண்டு பார்சல்கள் வந்துள்ளது. ஒன்று அமெரிக்க பாதுகாப்பு படையின் செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸுக்கும், மற்றொன்று அட்மிரல் ஜான் ரிச்சர்ட்சனுக்கும் வந்துள்ளது. இவர்கள் இருவரும் அமெரிக்க ராணுவத்திலும், பாதுகாப்பு படையில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள். இதன் காரணமாகவே இந்த சம்பவம் பெரிதாகி உள்ளது.

இந்த ரெசின் வகையான விஷங்களுக்கு உலகில் எங்கும் மருந்து கிடையாதாம். இதை குண்டுகளில் தடவி பயன்படுத்தலாம். ஊசியில் தடவியும் பயன்படுத்தலாம். ஆனால் இந்த பார்சலில் இருந்த ரெசின் முகர்ந்து பார்த்தாலே மயக்கம் வர வரவைக்கும் பவுடர் வகையானது. இது 48 மணி நேரத்தில் உயிரையே பறிக்க வைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனையை மிகவும் பெரிதாக விசாரிக்க உள்ளது அமெரிக்க அரசு. இதற்காக சிறப்பு விசாரணை குழுவை அமெரிக்க உருவாக்கி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து