முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன ஓவியரின் படைப்பு ரூ. 476 கோடிக்கு ஏலம்

வியாழக்கிழமை, 4 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

ஹாங்காங்,சீனத்தின் புகழ்பெற்ற ஓவியர் ஸா வூ கி, ஜூயின் அக்டோபர் 1985 எனும் தலைப்பில் வரைந்த அரூப ஓவியம் ரூ.476 கோடிக்கு ஏலம் போயிருப்பது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

புகழ்பெற்ற சோதபீஸ் ஏல நிறுவனத்தின் ஹாங்காங் கிளையில் நடைபெற்ற ஏலத்தில் ஸா வூ கியின் ஓவியம் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. 1920-ல் சீனத்தில் பிறந்த ஸா வூ கி, 1948-ல் பாரிஸுக்கு இடம்பெயர்ந்தார். மேற்கத்திய நவீனத்துவக் கலையின் தாக்கம் கொண்ட அவர், கீழைத்தேய கலையின் தத்துவவியலையும் மேற்கத்திய கலையின் தொழில்நுட்பங்களையும் இரண்டறக் கலந்து அரூப ஓவியங்கள் வரையும் கலைத் திறன் படைத்தவர். 2013-ல் மறைந்த ஸா வூ கியின் ஓவியம் அவரது இறப்புக்குப் பிறகும் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து