முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 தமிழக அரசு பள்ளிகளுக்கு தூய்மைப் பள்ளி தேசிய விருதுகள் முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் செங்கோட்டையன்

வியாழக்கிழமை, 4 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தமிழ்நாட்டில் உள்ள 6 அரசு பள்ளிகளுக்கு மத்திய அரசு வழங்கிய தூய்மை பள்ளி விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காட்டி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வாழ்த்து பெற்றார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் 3-ம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், 18.9.2018 அன்று புது டில்லியில் நடைபெற்ற விழாவில், தேசிய அளவிலான தூய்மைப் பள்ளிக்கான விருதிற்கு தமிழ்நாட்டிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 6 பள்ளிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரால் வழங்கப்பட்ட தேசிய தூய்மைப் பள்ளி விருதுகளையும், தேசிய அளவில் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளுக்கு தேசிய தூய்மைப் பள்ளி விருதுகள் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றதற்காக வழங்கிய சான்றிதழையும் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுலின்படி 2014ம் ஆண்டு முதல் “தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி” என்ற திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2017–18ம் ஆண்டிற்கான தூய்மை பள்ளிக்கான தேசிய அளவிலான விருது வழங்கும் விழா 18.9.2018 அன்று புதுடில்லியில் நடைபெற்றது.இவ்விழாவில், தேசிய அளவிலான தூய்மைப் பள்ளிக்கான விருதிற்கு தமிழ்நாட்டிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கரூர் மாவட்டம், தாந்தோணி வட்டாரத்திலுள்ள டி.செல்லாண்டிப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, தேனி மாவட்டம், மயிலாடும்பாறை வட்டாரத்திலுள்ள கொம்பைதொழு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டாரத்திலுள்ள எம். ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் வட்டாரத்திலுள்ள அரியப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாரத்திலுள்ள இ.ஆவாரம்பட்டி அரசு கேஆர். உயர்நிலைப் பள்ளி, அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரத்திலுள்ள சிலுவைசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய 6 பள்ளிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தேசிய அளவிலான தூய்மைப் பள்ளிக்கான விருதுகளை வழங்கினார்.

மேலும், தேசிய அளவில் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளுக்கு தேசிய தூய்மைப் பள்ளி விருதுகள் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றதற்கான சான்றிதழையும் வழங்கினார்.இந்த விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காட்டி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வாழ்த்து பெற்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து