முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்கோட் முதல் டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் இந்திய அணி: 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள்

வியாழக்கிழமை, 4 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

ராஜ்கோட் : ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தியா - மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

9 டெஸ்ட் தொடர்கள்

இங்கிலாந்துக்கு சென்று டெஸ்ட் தொடரில் 1-4 என்ற கணக்கில் உதை வாங்கிய இந்திய அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவதில் முனைப்பு காட்டி வருகிறது. சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்திய அணி, போதிய அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்தி விடும் என்பதே நிபுணர்களின் கணிப்பாகும். உள்ளூரில் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி முத்திரை பதித்துள்ள இந்திய அணி, அந்த எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தும் ஆவலில் இருக்கிறது.
இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்;

இந்திய அணி

லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரகானே, ரிஷாப் பாண்ட் (கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகம்மது சமி, உமேஷ் யாதவ்.

வெஸ்ட் இண்டீஸ் அணி

பிரத்வைதே (கேப்டன்), கிரன் பவல், ஷா ஹோப், ஷிம்ரோன் ஹெட்மேயர், ரோஸ்டன் சேஸ், சுனில் அம்ப்ரிஸ், ஷேன் டவ்ரிச் (கீப்பர்), தேவேந்திர பிஷூ,  ஷேர்மன் லெவிஸ், ஷேனன் கப்ரியல்.

293-வது வீரராக அறிமுகம்

இந்திய டெஸ்ட் அணியின் 293-வது வீரராக அறிமுகமாகியுள்ள பிரித்வி ஷா மற்றும் கே.எல்.ராகுல் இணை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால் கப்ரியல் வீசிய முதல் ஓவரில் எல்.பி.டபல்யூ முறையில் டக் அவுட் ஆகி கே.எல்.ராகுல் அதிர்ச்சியளித்தார். பின்னர் களமிறங்கிய புஜாரா மற்றும் பிரித்வி ஷா ஜோடி மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை நாலா புறமும் சிதறடித்தனர். இதனால், இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினர்.

புஜாரா-ஷா ஜோடி...

அறிமுகப்போட்டி என்ற பதற்றமே இல்லாமல் அதிரடியாக விளையாடிய பிரித்வி ஷா 99 பந்துகளில் சதம் அடித்து ஆச்சரியப்படுத்தினார். இதன் மூலம் அறிமுகப்போட்டில் சதமடித்த 15-வது வீரர் எனும் பெருமையை அவர் பெற்றார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா 86 ரன்கள் அடித்திருந்த நிலையில் லீவிஸ் வீசிய பந்தில் விக்கெட்கீப்பர் டோவ்ரிச்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு புஜாரா-ஷா ஜோடி 208 ரன்கள் குவித்தது. அணியின் எண்ணிக்கை 232 ஆக இருந்த போது 134 ரன்கள் அடித்திருந்த பிரித்வி ஷா பிஷோ வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

19-வது அரை சதம்

அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலியும், துணை கேப்டன் ரகானேவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்த நிலையில் ரகானே 41 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பொருப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளில் தனது 19வது அரை சதத்தை நிறைவு செய்தார். இறுதியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 89 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு ரன்கள் குவித்தது.

மேற்கு இந்திய தீவுகள் தரப்பில் கப்ரியல், பிஷோ,  லீவிஸ் மற்றும் சேஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். விராட் கோலி 72  ரன்களுடனும், ரிஷப் பண்ட் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து