முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார் எதிர்க்கட்சிகளையும்,துரோகியையும் வீழ்த்துவோம்: ஓ.பி.எஸ். பேட்டி

வியாழக்கிழமை, 4 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை,திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார். எதிர்க்கட்சிகளையும், துரோகியையும் வீழ்த்துவோம் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்பு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, திருப்பரங்குன்றம் தொகுதியினுடைய கழக நிர்வாகிகள், செயல் வீரர்கள் கூட்டம் இன்றைக்கு சிறப்பான முறையில் நடைபெற்றது. தமிழக முதல்வர் கலந்து கொண்டு நல்ல பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். தேர்தல் எப்பொழுது வந்தாலும், உறுதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், கிட்டத்தட்ட ஒரு 50,000 வாக்குகள் வித்தியாசத்தில், மகத்தான வெற்றி பெறும். ஏனென்று சொன்னால், கழகத்தினுடைய நிர்வாகிகள், தொண்டர்கள், செயல் வீரர்கள் அப்படியே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக இருக்கின்றார்கள், அவர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள், எழுச்சியோடு இருக்கிறார்கள், எப்போது தேர்தல் வந்தாலும் எதிர்த்து நிற்கின்ற எதிர்க்கட்சியை தோற்கடிக்க தோள்கொடுப்போம் என்று இன்றைக்கு சபதம் எடுத்திருக்கிறார்கள்.

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டை. கடந்த கால சட்டமன்ற வரலாறுகளை எடுத்துக் கொண்டால், அனைத்து தேர்தல்களிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. முறைப்படியான தேர்தல், அடிப்படையான தேர்தல், பூர்வாங்கப் பணிகள் மூலமாக நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பதிலளித்தார். அவை வருமாறு:-

கேள்வி: நடிகர் விஜய் முதலமைச்சராக வருவது பற்றி..

பதில்: தமிழகத்தில் இருக்கக்கூடிய ஏழரை கோடி மக்களுக்கும் முதலமைச்சர் ஆகவேண்டுமென்ற ஆசையிருக்கிறது. யார் வேண்டுமானாலும் எந்தக் கருத்தை வேண்டுமானாலும் சொல்லலாம். சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தேர்தலுக்கான வெற்றி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து