முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

18 சர்வதேச தொண்டு நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லமாபாத், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  ஜோகன்னஸ்பர்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ”ஆக்சன் ஏய்டு” என்ற தொண்டு நிறுவனம் பாகிஸ்தானில் செயல்படும் தொண்டு நிறுவனங்களில் ஒன்றாகும், வறுமை ஒழிப்பு, கல்வி, மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பணியை “ ஆக்சன்ஏய்டு” தொண்டு நிறுவனம் செய்து வருகிறது.

பாக். அரசு நோட்டீஸ்

இந்த நிலையில், 60 நாட்களுக்குள்  தங்கள் செயல்பாடுகளை முடித்துக்கொண்டு 60 நாள்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் பாகிஸ்தான் அரசு தங்கள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் விடுத்துள்ளதாக ஆக்சன் ஏய்டு தெரிவித்துள்ளது. ஆனால், எதுவும் காரணம் தெரிவிக்கப்பட்டதா? என்பதை அந்த அமைப்பு தெரிவிக்கவில்லை. 

17நிறுவனங்களுக்கு... 

சிவில் சமூகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல் இது என ஆக்சன் ஏய்டு நிறுவனம் பாகிஸ்தானின் புதிய உத்தரவை கடுமையாக விமர்சித்துள்ளது. ஆக்சன் ஏய்டு அமைப்பை போல, மேலும் 17 தொண்டு நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் உள்துறை இத்தகைய நோட்டீஸை விடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து