முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் மாநில எல்லையில் 7 இந்திய கிராமங்களுக்கு உணவு வழங்கும் சீனா !

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

டேராடூன், உத்தரகாண்ட் மாநில எல்லையில் 7 கிராமங்களில் வாழும் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சீன பகுதிகளுக்கு சென்று வாங்கி வருகின்றனர்.

அன்றாட வாழ்க்கைக்கு...

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிதோர்கர் மாவட்டத்தின் சில பகுதிகள் சீன எல்லையில் உள்ளன. இங்குள்ள தர்சுலா பகுதி பயாஸ் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது மிகவும் உள்ளடங்கிய பகுதி. எனவே இப்பகுதியில் உள்ள பஞ்சி, கஞ்ச்சி கார்பயாங், குத்தி, நபால், நாபி மற்றும் ராங்காங் ஆகிய 7 கிராமங்களில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உணவு பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை.

பாதுகாப்பு காரணங்கள்...

இக்கிராமங்கள் சீன எல்லையில் இருப்பதால் பாதுகாப்பை காரணம் காட்டி முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்ல முடிவதில்லை. எனவே மேற்கண்ட 7 கிராமங்களில் வாழும் 400 குடும்பத்தினர் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சீன பகுதிகளுக்கு சென்று வாங்கி வருகின்றனர்.

கூடுதல் விலைக்கு...

மேலும் தேவையான பொருட்களை மற்றொரு அண்டை நாடான நேபாளம் சென்றும் வாங்குகின்றனர். உத்தரகாண்ட் மாநில அரசு அங்குள்ள 2 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை ரேசன் கடைகள் மூலம் வழங்குகிறது. அது போதுமானதாகவும் இல்லை. அதுவும் சரிவர கிடைப்பதில்லை. இதனால் சீனா மற்றும் நேபாள பகுதிகளுக்கு சென்று அத்தியாவசிய உணவு பொருட்களை கூடுதல் விலைக்கு வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து