அ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2018      அரசியல்
Thangamani

நாமக்கல், ஒற்றுமையாக உள்ள முதல்வர் மற்றும் துணை முதல்வரை பிரித்தாலும் சூழ்ச்சியில் தினகரன் ஈடுபட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

நாமக்கல்லில் நேற்று அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் உதய் திட்டத்தில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக இருக்கிற கோரிக்கையை நீக்கப்பட்டபிறகு தான் அந்த ஒப்பந்தத்தில் இணைந்தோம். எனவே, இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மழை தொடர்பாக விடப்பட்ட ரெட் அலர்ட் சம்பந்தமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  அனைத்து துறை சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. அதுபோல் மின்வாரியம் சார்பில் எனது தலைமையில் தலைமை செயலகத்தில் நாளை (இன்று) கூட்டம் நடைபெறுகிறது.

டி.டி.வி.தினகரன் விரக்தியின் விளிப்பிற்கே சென்று விட்டார். திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைதேர்தலில் அவருடைய 20 ரூபாய் டோக்கன் செல்லாது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எங்களிடம் தினகரன் தான் கட்சியை அ.தி.மு.க.வுடன் இணைப்பதாக தூதுவிட்டார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. நேரம் வரும்போது தினகரன் தூதுவிட்டதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன். அ.தி.மு.க.ஏற்றுக் கொள்ளாததால் விரத்தியின் விளிம்பில் தங்க தமிழ்ச்செல்வன் உளறுகிறார். ஓற்றுமையாக உள்ள முதல்வர், துணை முதல்வரை  பிரித்தாளும் சூழ்ச்சியை தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மூலமாக மேற்கொண்டார்.

ஆட்சியில் இல்லாத போதும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வெளியே ஓட்டல் கட்டி வரும் அவர் தான் ஊழல் செய்துள்ளார். இப்போது ஊழல், ஊழல் என்று சொல்கிறார். ஊழலுக்கு தலைவரே அவர் தான். மு.க.ஸ்டாலின், நாங்கள் காற்றாலையில் முறைகேடு செய்வதாக கூறி வருகிறார். நாங்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை. இது சம்பந்தமாக அவர்கள் வழக்கு தொடர்ந்தால் அதை சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து