முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளி கண்காட்சி-2018 தேனி கலெக்டர் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2018      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில்  இந்திய விண்வெளி வார விழாவினை முன்னிட்டு இந்திய விண்வெளி கண்காட்சி-2018-யினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ்  துவக்கி வைத்து பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,
தேனி மாவட்டத்தில் இந்திய விண்வெளி வார விழாவினை முன்னிட்டு இந்திய விண்வெளி கண்காட்சி-2018 நடத்தப்படுவது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான நிகழ்ச்சியாகும்.  விண்வெளி ஆராய்ச்சியில் உலக அளவில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் குறித்தும், அதில் இந்தியா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் குறித்தும் அறிந்து கொள்ளுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். நமது அன்றாட வாழ்வில் சாதரணமாக பயன்படுத்தக்கூடிய கைபேசிகளில் தொடங்கி, இணையதளத்தில் நாம் தேடும் அனைத்து பயன்களும், விண்வெளி ஆராய்ச்சியின் மூலம் கிடைக்கப்பெற்றதாகும். விண்வெளி ஆராய்ச்சியின் மூலம் நிலத்தடி நீர்மட்டம், கடலில் அதிக அளவில் மீன் கிடைக்கப்பெறும் பகுதிகள், நில நடுக்கம், பேரிடர் நிகழ்வுகள்  போன்ற எதிர்கால நிகழ்வுகள் குறித்தும் அறிந்து கொள்ள முடியும்.
 மாணவ, மாணவியர்கள், தங்களது இலட்சியங்களை அடைய மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் திட்டமிட்டு மாணவ, மாணவியர்கள் கனவு காணுங்கள் எனக் கூறினார். அவர்களின் இலட்சியத்தினை அடைந்திடவும், எதிர்கால வளர்ச்சியடைந்த இந்தியாவினை உருவாக்கிட மாணவ, மாணவியர்கள் கடுமையாக உழைத்திட வேண்டும். விண்வெளி ஆராய்ச்சியினை பற்றி அறிந்து கொள்ளுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இக்கண்காட்சியினை மாணவ, மாணவியர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்,   தெரிவித்தார்.
இக்கண்காட்சியில், மகேந்திரகிரி, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன உந்தும வளாக இயக்குநர் டி.மூக்கையா,  , மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து